Breaking News

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம்

அட்மின் மீடியா
0

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 



2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொண்ட குழுவிலும் இடம் பெற்றிருந்தார் 

2003-ல் சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார். 

2013-ம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின்போது எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டார். ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார்.

இதை அடுத்து தற்போது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியில் இருந்து வந்தார்.இந்த நிலையில் இன்று ஏ டி எஸ் பி வெள்ளத்துரை பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஆணையை உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று ஓய்வு பெற இருந்த ஏ டி எஸ் பி வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback