Breaking News

நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளது இஸ்ரோ கண்டுபிடிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

நிலவின் துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதில் விக்ரம் லாண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது.

அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, சந்திராயன் திட்டத்தின் தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தது.

இதில் துருவப் பள்ளங்களின் மேற்பரப்பில் உள்ளதை காட்டிலும் அதற்கு கீழுள்ள சப்-சர்ஃபேஸ் பகுதியின் முதல் இரண்டு மீட்டர்களில் பனியின் அளவு ஐந்து முதல் எட்டு மடங்கு வரை பெரிதாக உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது

மேலும், வட துருவப் பகுதியில் உள்ள பனியின் அளவு தென் துருவப் பகுதியை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனிக் கட்டிகளாக உறைந்து இருப்பதையும் உறுதி செய்துள்ளது.


Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback