Breaking News

ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம் முழு விவரம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஈரான் நாட்டின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஹெலிகாப்டரில் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக், மத போதகர் அயதுல்லா முகமது அலி அல்-ஹாசிம், அதிபரின் பாதுகாப்பு படை தலைவர் சர்தார் சையது மெஹதி மவுசாவி,விமானிகள் கர்னல் சையது தாஹிர், கர்னல் மோசின், விமான தொழில்நுட்ப நிபுணர் மேஜர் பெஹ்ருஸ் காதிமி, ஐஆர்ஜிசி படை மூத்த அதிகாரி அன்சர் அல்-மாதி ஆகிய 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback