Breaking News

ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாலஸ்தீனம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை (United Nations Security Council, UNSC) பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். 

ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல் மற்றும் இராணுவ நடிவடிக்கைகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களை தனது தீர்மானங்கள் மூலமாக நிலைநாட்டுகிறது. இந்த ஐநா சபையில் 193 நாடுகள் இதுவரை உறுப்பினராக உள்ளது

வீட்டோ அதிகாரம்:-

வீட்டோ அதிகாரம் என்பது எளிய மொழியில் தன்னிகரற்ற அதிகாரம் எனலாம். சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளாகும்.

ஐ.நா. சபையின் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளில் ஒரு நாடாயினும் விரும்பாத ஒரு தீர்மானத்தை ஐ.நா. சபையால் எடுக்க முடியாது. அந்தத் தீர்மானத்தை எடுக்கின்றபோது கூட அதனைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் இந்த நாடுகளுக்கு உண்டு. 

பாலஸ்தீனம்:-

பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது. 

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபைக்கு "பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அனுமதிக்க வேண்டும்" என்று பரிந்துரைக்கும் வரைவுத் தீர்மானத்தின் மீது 15 நாடுகளின் கவுன்சில் வாக்களித்தது

தீர்மானம்:-

ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. 

பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. இந்தியாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. 9 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது, 

கடந்த மாதம் பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐநாவில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராவது குறித்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது, இதன்பின்பு  உலக நாடுகள் மத்தியில் பாலஸ்தீனத்தின் குரல் வலிமையாக ஒலிக்கும்.

பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக பொதுச்சபையில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சில் இது தொடர்பாக முடிவை எடுக்க உள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback