Breaking News

வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்




தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகளை, வீட்டு மனை / நிலத்தில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க, இணைய வழியில் விண்ணப்பியுங்கள்.

மின் கம்பிகள், மின்கம்பங் களை மாற்ற இனி இணையதளம் மூலம் விண் ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வோரின் வசதிக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

வீட்டின் மேலே செல்லும் மின் கம்பிகள், வீட்டு மனை மற்றும் நிலத்திலுள்ள மின் கம்பங் களை இடமாற்றம் செய்வதற்காக இந்த இணை யதளத்தில் தகவல் அளிக்கலாம்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அதற் கான பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதன்மூலம் சிரமமின்றி மின்நுகர்வோர் தங்கள் மின்கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் பணியை செய்து முடிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இணைய முகவரி இங்கு கிளிக் செய்யுங்கள்

https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback