Breaking News

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

அட்மின் மீடியா
0

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெர்மனியில் இருந்து நாடு திரும்புகையில் பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர்

கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். 

மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.இவர், சில பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.இதற்க்கிடையில் அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி சமூக வலைதளங்களில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டார். அதில் மே.31-ம் தேதி நாடு திரும்புவதாகவும், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாவும் தெரிவித்தார்.

ஜெர்மனின் முனிச் நகரிலிருந்து புறப்பட்டு இன்று (மே.31) 1.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையம் வந்திறனார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைதுசெய்து சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். 

முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று (மே.31ம் தேதி) காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback