கிர்கிஸ்தானில் வெடித்த திடீர் வன்முறை! இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்
மத்திய ஆசியப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடு தான் கிர்கிஸ்தான்.. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 70 லட்சம் தான். இந்த நாட்டில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் தங்கி மருத்துவப் படிப்பு படிப்பு படித்து வருகின்றார்கள் இந்தச் சூழலில் தான் அங்கு இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கும் விடுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியானது.
உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளநிலையில், அங்கு பயிலும் இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.உள்ளூர் மக்களின் தாக்குதலால், விடுதியை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர்.
இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் வன்முறையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது நிலைமை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த வன்முறையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமடைந்ததாகத் தகவல் கிடைக்கவில்லை" என்று கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் இது குறித்து விளக்கமளித்துளது
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து வன்முறை வெடித்துள்ளது.பிஷ்கெக்கில் உள்ள இந்தியா மாணவர்கள் கவனமாக இருக்கும்படியும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை அமைதியாகவே உள்ளதாக கிர்கிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் உள்ளூர் மக்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக மாணவ மாணவிகள் 24 மணி நேரமும் ஹாஸ்டல் விளக்கை அணைத்தே வைத்திருக்கிறோம். எங்களால், சாப்பாட்டுக்காக கேண்டீன்கூட செல்ல முடியவில்லை. விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளோம். தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பவர்களின் நிலைமை மிகவும் மோசம். வீட்டை விட்டு வெளியே வந்தால் தாக்கப்படும் அபாயம் உள்ளதால் இருளில் உள்ளார்கள்
கிர்கிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம், "நாங்கள் அங்குள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் தற்போதைய சூழலில் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உதவி எண் 0555710041" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ItsKhan_Saba/status/1791759514892751302
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
