Breaking News

சுற்றுலா பயணிகள் உற்சாகம்! ஜூலை வரை ரயில் சேவை நீட்டிப்பு பட்டியல் இணைப்பு

அட்மின் மீடியா
0

ஜூலை 6ம் தேதி வரை ரயில் சேவை நீட்டிப்பு... சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

தற்போது மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூன் மாதம் வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயிலானது (06012) வரும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயிலானது (06011) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மேலும் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,

தற்போது இந்த ரயில் சேவை ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6, 13 , 20 , 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 3 மணிக்கு ஜூன் 7, 14 , 21 , 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயிலும், 

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 2,16, 30 ஆகிய தேதிகளில் இரவு 11 .15 மணிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது

கோடை விடுமுறையையொட்டி கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சென்னை - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் ஜூன் 6, 13, 20, 27 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி - சென்னை சிறப்பு ரயில் (எண்:06044) மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback