Breaking News

நடுரோட்டில் மோதிக்கொண்ட ரவுடி கும்பல் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நடுரோட்டில் மோதிக்கொண்ட ரவுடி கும்பல் வைரல் வீடியோ

கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதிவாகி அதிர வைத்திருக்கிறது. கடந்த 18ம் தேதி நள்ளிரவு உடுப்பியில் இளைஞர்கள் கும்பல் ஒன்று நடுரோட்டில் சென்று மோதி விபத்துக்குள்ளானது. 

வெள்ளை நிற காரில் வந்த கும்பல் மற்றொரு காரில் இருந்தவர்களை வழிமறித்து தாக்கியது. அப்போது, காரில் இருந்து இறங்கிய இருவர், வெள்ளை நிற காரில் வந்தவர்களை தாக்க முயன்றனர். ஆனால் வெள்ளை நிற கார் ஓட்டுநர் தனது காரை எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார்.

அதன்பின் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டுள்ளனர்.ரகளையில் ஈடுபட்டவர்களில் 4 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback