Breaking News

வெளிநாடு செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் மத்திய அரசு

அட்மின் மீடியா
0

வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இத்தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாள்கள் கழித்தே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், அதேபோல, மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன:-

மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். 

டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களில் ஏடிஸ் ஜேசிப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் உண்டாகிறது.மஞ்சள் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தடுப்பூசியும் போடப்படுகிறது.

மஞ்சள் காய்ச்சல் விவரங்கள், தடுப்பூசி பற்றிய தகவல்களை htps://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தடுப்பூசி:-

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தில் அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10 - 12 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்காக ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.kipmr.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகச் சென்றும் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை இராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் அனைத்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 9 - 12 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்காக ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. porthealthofficechennai@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். 

தூத்துக்குடியில் உள்ள துறைமுக சுகாதார அதிகாரி அலுவலகத்தில் அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 11 - 1 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்காக ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு நேரடியாகச் சென்று மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்பவர்கள் தயங்காமல் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயனடைய முன்வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback