உடல் எடை குறைக்க ஆபரேஷன் இளைஞர் பலி - மருத்துவமனையை மூட உத்தரவு
உடல் எடை குறைப்பு ஆபரேஷனில் இளைஞர் பலி - மருத்துவமனையை மூட உத்தரவு
இவர் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்கள் இவரை அறுவை சிகிச்ச்சை மூலம் உடல் பருமனை குறைக்கலாம் என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
அதன்படி நேற்று ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் எதிர்பாராத விதமாக ஹேமச்சந்திரன் உயிரிழந்தார்.
ஹேமசந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது
மேலும் உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில் எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் புதுச்சேரி செய்திகள்
