ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து - விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் வைரல் வீடியோ
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அவரது நிலைமை மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியதால் ஈரானில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடு ஈரான். அந்நாட்டில் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில், பாலஸ்தீனத்துக்கு பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வந்தவர் இப்ராஹிம் ரைசி. இதனால் ஈரான் மீது இஸ்ரேலும் பல முறைமுக தாக்குதல்களை நடத்தி வந்தது.
இந்நிலையில் நேற்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர், இன்று இரவு 8 மணியளவில் தரையிறங்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகின.
இதையடுத்து, மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் சில அரசு செயலாளர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர். ஹெலிகாப்டரில் இருந்த அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் ஈரானில் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார்.அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் மீட்புப்பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மாயமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களை துருக்கி ஆளில்லா விமானம் கண்டுபிடித்தது
இதையடுத்து அப்பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது.
மலைப்பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சுற்றியும் மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்..
விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் கடைசி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Trudeaus_Ego/status/1792362113878704452
ஹெலிகாப்டர் விபத்து வீடியோ பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Abrarvoice1/status/1792255823399587996/video/1
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
