Breaking News

சிக்கலில் யூடியூபர் இர்பான்- நடவடிக்கை எடுக்க பரிந்துரை முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை!

வெளிநாட்டில் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை நேற்று அறிவித்திருந்தார் இர்ஃபான்!


பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து ஒரு பெரிய பார்ட்டி வைத்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

யூடியூபர் இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளதுவயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

யூடியூபர் இர்ஃபான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர்

இவர் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் இர்ஃபான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை தன் நண்பர்களுடன் இணைந்து இதை கொண்டாடியுள்ளார். இதற்கான வீடியோவை அவர் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவெடுத்துள்ளது. 

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்து, குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback