Breaking News

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு

அட்மின் மீடியா
0

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 



கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும், வீடு திரும்பவில்லை எனவும் மகன் புகார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் உடல் பாதி எரிந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உடல் மீட்கப்பட்டுள்ளது ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக முன்னதாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், இறந்தால் காரணம் என சிலரின் பெயர்களை ஏப்ரல் 30 ம் தேதியே KPK ஜெயகுமார், மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback