கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் தமிழக சுகாதரத்துறை கொடுத்த அப்டேட் முழு விவரம்
வெஸ்ட் நைல் வைரஸ்:-
வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், அப்பெயரில் அழைக்கப்படுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் என்பது, ‘க்யூலக்ஸ்’ வகை கொசுக்களால் பரவக்கூடிய நோய். இந்த வைரஸ் பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பின் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை
அறிகுறிகள்:-
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான மக்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற பொதுவான அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும். சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல்,கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளைக்காய்ச்சல் ஏற்படும்.இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது.
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்:-
வெஸ்ட் நைல் என்ற வைரஸ் காய்ச்சல் கேரளாவில் ஆட்டம் காட்டி வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பரவியுள்ளது. தமிழக எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இங்கேயும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
தமிழக சுகாதாரதுறை எச்சரிக்கை:-
இந்த காய்ச்சல் பரவினால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.
காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் எடுத்து கொள்ள வேண்டும்.
காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க போதியளவு நீர் மற்றும் திரவ உணவை உட்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வீடுகளை சுற்றி சுத்தமாகவைத்து கொள்ள வேண்டும். நீர்தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 104 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்
