சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு முழு விவரம்
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு முழு விவரம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி தேனியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்ததாக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார் மேலும் பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரையடுத்து சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ‘சவுக்கு மீடியா’அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை நடத்தினர்.
சுமார் 10 மணிநேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கஞ்சா, செல்போன்,டேப், 2 லட்சம் பணம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
