Breaking News

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு! ArvindKejriwal has got interim bail

அட்மின் மீடியா
0

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு! ArvindKejriwal has got interim bail

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது அமலாக்கத்துறை .அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலை காரணம் காட்டி ஜாமின் கோரியிருந்த நிலையில் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback