கோவை மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை - 8 பேர் கைது
மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை - 8 பேர் கைது
கோவை KMCH மருத்துவமனையில் தொழிலாளி ஒருவர் அடித்து கொலை - 8 பேர் கைது!
மருத்துவமனை வளாகத்தில் இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக தொழிலாளி ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உட்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளைத் திருட முயன்ற ராஜாவை, மருத்துவமனை காவலாளிகள் சரமாரியாகத் தாக்கிய நிலையில், அவர் அங்கேயே மயங்கி விழ, ராஜாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த ராஜா கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் . இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா உயிரிழந்தது தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை பாதுகாவலர்கள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags: தமிழக செய்திகள்
