உ.பியில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர் கைது - சர்ச்சைக்குரிய வைரல் வீடியோ
உ.பியில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர் கைது - வைரல் வீடியோ
உ.பியில் பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த 17 வயது சிறுவன் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியீடு
இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் இளைஞர் ஒருவர்பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பரூகாபாத் லோக்சபா தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது போலத் தெரிகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்
இந்நிலையில் உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையர், "இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் உத்தரப் பிரதேச போலீசார் வாக்களித்த அந்த இளைஞரை கைது செய்துள்ளார்கள் மேலும் அந்த இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது அந்த நபருக்கு வயது 17தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதகாரி வெளியிட்ட அறிக்கையில், 1950, 1951, 1989 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/INCIndia/status/1792162984984183240
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
