ஊட்டிக்கு அரசு பேருந்தில் வருபவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை - மே 7 முதல் இ-பாஸ் முறை அமல் முழு விபரம்
மே 7ம் தேதி முதல் நீலகிரிக்கு வாகனத்தில் வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம்... இதில் யாருக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது...வாகனங்களுக்கு மட்டுமே முறையாக இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வர வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்
மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை இ-பஸ் பதிவு செய்த பின்னே மாவட்டத்திற்குள் வர வேண்டும் எனவும், வாகனத்தில் வரும் எத்தனை நபர்கள் என்று இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து நாளை புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த இணையதளம் மூலம் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டும் எனவும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்த எந்தவிதமான தடையும் இல்லை எனவும், முறையாக இ-பாஸ் பெற்று வரும் அனைத்து வாகனங்களும் நீலகிரிக்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்
