வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம் - ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம் - ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
தென்காசி நல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு கடந்த ஆண்டு கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனவே அவருக்கு வளைகாப்பு விசேஷம் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி கஸ்தூரியை அழைத்து கொண்டு தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது வாந்தி வந்துள்ளது இதனால் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் படிக்கட்டில் நின்று கொண்டு வாந்தி எடுக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்
உடனே உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.ஆனால் ரெயில் நிற்கவில்லை. உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.அதன்பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்
