Breaking News

ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள் ஜூன் 3 ஆம் தேதி வெறும் கண்களால் காணலாம்

அட்மின் மீடியா
0

ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள் ஜூன் 3 ஆம் தேதி வெறும் கண்களால் காணலாம்



வானில் 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளா்.

பூமி உட்பட நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்றுப்பாதை பாதைகளில், வெவ்வேறு சுற்றுப்பாதை வேகத்துடன் சூரியனைச் சுற்றி வருகின்றன. கோள்கள் ஒவ்வொன்றும் அதற்குரிய நீள்வட்டப் பாதையில் சூரியனை தொடா்ந்து சுற்றி வருகின்றன.

இதனால் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் சுற்றும் கோள்களை நாம் பார்ப்பது மிகவும் அரிது. அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஜூன் 3 ஆம் தேதி புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கிரகங்களை ஒரே நேர்கோட்டில் காணலாம் என தெரிவித்துள்ளனர்.

ஜூன் 3-ஆம் தேதி கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வர உள்ளன.

இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பாா்க்கலாம் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதை தொலைநோக்கியின் உதவியுடன் பாா்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளா். 

இந்த அரிய நிகழ்வுகளை காண சென்னை பிா்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இது போன்ற 5 அல்லது 6 கிரகங்களின் அணிவகுப்பை மீண்டும் ஆகஸ்ட் 28ம் தேதியும், பின்னர் 2025ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, பிப்ரவரி 28ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 29ம் தேதிகளில் மீண்டும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback