Breaking News

கோடை வெப்பத்தை தணிக்க சென்னைக்கு அருகில் உள்ள 5 நீர்வீழ்ச்சிகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோடை வெப்பத்தை தணிக்க சென்னைக்கு அருகில் உள்ள 5 நீர்வீழ்ச்சிகள் முழு விவரம்

சென்னை சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு நாளில் குடும்பத்துடன் சென்று உற்சாக குளியல் போடுவதற்கான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

தடா நீர்வீழ்ச்சி:-

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. 

இங்கு பைக், கார் பார்க்கிங் வசதி உண்டு. நீர்வீழ்ச்சி செல்ல சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றவுடன் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் பெரிய குளத்தில் தேங்கி இருக்கும். அங்கு நீங்கள் குடும்பத்துடன் குளிக்கலாம். 

ஆரே நீர்வீழ்ச்சி:-

சென்னையில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. திருப்பதிக்கு அருகிலுள்ள நகரி மலைகளின் பள்ளத்தாக்கில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

நீர்வீழ்ச்சி செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றாகவேண்டும்

இங்கு மொத்தம் ஐந்து நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. இங்கு பார்க்கிங் வசதியும் உண்டு.

சதாசிவ கோனா நீர்வீழ்ச்சி:-

சென்னையில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு அம்மாவாரி, அய்யாவாரி என இரு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. 

கைலாசா கோனா நீர்வீழ்ச்சி:-

சென்னையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. திருவள்ளூர் - நாகலாபுரம் வழியாக இந்த இடத்தை செல்ல முடியும். 

இங்கு மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. 

மூல கோண நீர்வீழ்ச்சி:-

சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரம் திருவள்ளூர் - புத்தூர் வழியாக சென்றடைந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback