Breaking News

சோகம்;- கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்பகுதியில் அலையில் சிக்கி, 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே லெமூரியா பீச்சில் கடல் அலையில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள்  ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு சென்றபோது திடீரென வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. 

இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்து எண்ணிக்கை 5 ஆனது. 

இந்நிலையில் மீட்புபணிகளை ஆய்வு மேற்கொண்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறுகையில், கன்னியாகுமரி லெமூர் கடற்கரையின் முன்வாசல் மூடி இருந்ததால் மாற்றுப்பாதையில் சென்று குளித்துள்ளனர். மாற்றுப்பாதையில் தடையை மீறி குளித்ததால் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். குமரி மாவட்ட கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்படும் என்றார்.

முன்னதாக பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை. கேரளம் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை (05.05.2024) கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு கடல் கொந்தளிப்பும் ஏற்படகூடும் என்றும், கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், 1.5 மீட்டருக்கு கடல் அலை எழும்ப கூடும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும், கரையோரத்தில திடீரென அதிக அலைகள் ஏற்படும் என்பதால் கடலில் குளிக்க வேண்டாம் என்றும், தாழ்வான கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடன்று மோதி சேதமடைவதை தடுக்கும் கையில் போதிய இடைவெளியிட்டு பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்துமாறும் கன்னியாகுமரி மீனவர்களுக்கு மாவட்ட அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback