Breaking News

விடுதலைப் புலிகள் அமைப்பிற்க்கு 5 ஆண்டுகளுக்கு தடை மத்திய அரசு உத்தரவு! LTTE ban in India

அட்மின் மீடியா
0

விடுதலைப் புலிகள் அமைப்பிற்க்கு 5 ஆண்டுகளுக்கு தடை மத்திய அரசு உத்தரவு!

இந்தியாவின் அண்டைநாடான இலங்கையில் இருந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் எனும் அமைப்பு கடந்த மே 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை இந்திய அரசு தடை செய்துள்ளது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழீழம் விடுதலை புலிகள் அமைப்பு 2009, மே மாதம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது வரையில் பல்வேறு நாடுகளில் செயல்படுவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, 2019 முதல் 2024 வரையில் இந்த தடை இருந்த நிலையில், தற்போது கூடுதல் 5 ஆண்டுகள் என 2029 வரையில் விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback