இன்று மதியம் 3 மணிவரை மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தினமும் அலுவலகத்திற்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மின்சார ரயிலில் பயணித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் உட்பட சில காரணங்களுக்காக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்கள் என்பதால் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்
