தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட் அடிப்படையில் பணி அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல் ஷிப்ட்
காலை 6 மணி முதல் மணி 2 மணி வரை,
இரண்டாவது ஷிப்ட்
மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை,
மூன்றாவது ஷிப்ட்
இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை
என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்
