குஜராத் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்து 33 பேர் பலியான சிசிடிவி காட்சிகள்!
குஜராத் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்து 33 பேர் பலியான சிசிடிவி காட்சிகள்!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி கேம் என்ற சிறுவர்களுக்கான தனியார் விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர், சிறுமியர் இம்மையத்துக்கு வருகை தந்தனர்.
அப்போது விளையாட்டு மையத்தின் தரைத் தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மேலே 4-வது மாடி வரை பரவியது.
இதில், சிறுவர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் தீ விபத்தில் சிக்கி இதுவரை சிறுவர் சிறுமிகள் உட்பட 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விளையாட்டு திடலின் உரிமையாளராக யுவராஜ் சிங் சொலாங்கி என்பவர் இருந்து வருகிறார். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த விபத்து சம்மந்தமாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என காவல் ஆணையாளர் ராஜு பார்கவா கூறியுள்ளார்.
தீ விபத்தில் காயமடைந்து 30 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெறுகின்றனர். அவர்களை, முதல்வர் பூபேந்திர படேல் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பைரேன் வைஷ்ணவ், தேவன் எம். தேசாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் போது மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை நீதிபதிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் விசாரணையின் போதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என காட்டமாக நீதிபதிகள் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ பார்க்க
https://x.com/DevMeghna/status/1794784068833518006/video/1
இந்நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ பார்க்க
https://x.com/DevMeghna/status/1794784068833518006/video/2
இந்நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ பார்க்க
https://x.com/cliQIndiaMedia/status/1795043221929607235
Tags: இந்திய செய்திகள்

