+2 விடைத்தாள் நகல் ஆன்லைனில் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி முழு விவரம்
+2 விடைத்தாள் நகல் ஆன்லைனில் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி முழு விவரம்
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டு சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று மே 28 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிடலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மார்ச் 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலினை 28.05.2024 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification- HSE Second Year Exam, March 2024 - Scripts Download" என்ற வாசகத்தினை "Click" செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் / அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் "Application for Retotalling / Revaluation" என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 29.05.2024 (புதன்கிழமை) பிற்பகல் 1.00 மணி முதல் 01.06.2024 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்.கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் -11 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
டவுன்லோடு செய்வது எப்படி எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://apply1.tndge.org/dge-notification/HRSEC
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - . 505/-
மறுகூட்டல்-!
உயிரியல் பாடம் மட்டும் --305/-
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) .205/-
Tags: கல்வி செய்திகள்
