Breaking News

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை அன்னதானம் தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை அன்னதானம் தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு


நாளை மே 28ம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும். இதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வருகிற மே 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.விஜய்அனைத்து கிளை நிர்வாகிகள், உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் விஜய் ரசிகர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

வணக்கம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம். ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி. மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback