2024 ம் ஆண்டின் முதல் ஹஜ் பயணம்... சென்னையிலிருந்து 326 பேர் பயணம் வீடியோ இணைப்பு! முழு விவரம்
2024 ம் ஆண்டின் முதல் ஹஜ் பயணம்... சென்னையிலிருந்து 326 பேர் பயணம்! முழு விவரம்
ஹஜ்2024ம் ஆண்டிற்கான முதல் பயணமாக நேற்று சென்னையிலிருந்து 326 பயணிகளுடன் ஹஜ் விமானம் சவூதி அரேபியா புறப்பட்டு சென்ற நிலையில், அவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேற்று புறப்பட்டது.இந்த விமானத்தில் 170 பெண்கள் உள்பட 326 பேர் பயணித்தனர்.
புனிதப் பயணம் செல்பவர்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5,470, புதுச்சேரியை சேர்ந்த 61, அந்தமான்- நிக்கோபர் தீவை சேர்ந்த 131 உள்பட 5,688 பேர் 17 விமானங்களில் புனிதப் பயணம் செய்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 276 பேர் பெங்களூரூ, மும்பை, ஹைதராபாத், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர்” என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/GingeeMasthan/status/1794709092722003970
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்
