Breaking News

பாம்பு கடித்தவரை கங்கை நீரில் வைத்தால் விஷம் இறங்கிவிடும் என்ற மூட நம்பிக்கையால் பறிபோன 20 வயது இளைஞர் வீடியோ

அட்மின் மீடியா
0

உபியில் பரிதாபம் பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும் மூட நம்பிக்கையால் பறிபோன 20 வயது இளைஞர்


மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர் உத்தர பிரதேசத்தின் புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக ஜெய்ராம்பூர் குடேனா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார், மக்களவை தேர்தலுக்கு வாக்களித்தவர் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் நடந்து வந்துள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது, இதனால் வயல்வெளியிலேயே மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு உடனே நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதனிடையே கிராமத்தினர் சிலர், மருத்துவத்தால் பாம்புக்கடி சரி ஆகாது, ஓடும் கங்கை நீரில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற கூறியுள்ளனர்.

அதனை நம்பிய அவர்கள் uஉரில் உள்ள அவந்திகா தேவி கங்கா காட் பகுதியில் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளார்கள்.கடந்த இரு நாட்களாக உடலை கயிறு கட்டி கங்கை நதியில் வைத்துள்ளனர்.ஆனால் பாம்பு விஷம் உடல் முழுவதும் பரவி மோகித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூட நம்பிக்கையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/niranjan2428/status/1785924734430892284

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback