ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்
ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் மாற்றங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதார் திருத்தம்:-
ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான தேதி ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதாரை புதுப்பித்துக் கொள்ள ஆதார் மையத்திற்குச் சென்று திருத்தங்களை மேற்கொண்டால், இலவசம் ஆகௌம் ஜூன் 14 ம் தேதிக்கு பிறகு ஒவ்வொரு திருத்தத்திற்கும் ரூ.50 கட்டணம் கொடுக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம்:-
ஜூன் 1 ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்று ஓட்டுநர் உரிமைத்தை பெற்றுக் கொள்ளலாம்.
திருத்தி அமைக்கப்பட்ட புதிய விதியின்படி, ஆர்டிஓவிடம் நேரில் சென்று தேர்வு எழுதத் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு விடும்.
18 வயதிற்க்குள் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்!
ஜூன் 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் மைனர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறும் தகுதியை இழந்து விடுவார். புதிய ஓட்டுநர் உரிம விதிகள் 2024ன் கீழ் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
