Breaking News

ஜூன் 1 முதல் ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் லைசன்ஸ் பெறலாம் வழிமுறை என்ன ! முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜூன் 1 முதல் ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் லைசன்ஸ் பெறலாம் வழிமுறை என்ன ! முழு விவரம்

தற்போதயை நடைமுறையின்படி,  ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அதற்கான சோதனைக்கு ஆர்டிஒ அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இந்த விதியை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது.அதாவது, தனியார் ஒட்டுநர் பயிற்சி மையங்களே சோதனை நடத்தி லைசன்ஸ் கொடுக்கலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கு நேரில் செல்ல வேண்டியது அவசியமாகிறது. இரு மற்றும் 4 சக்கர வாகனம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். இதுவரை லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுநர் சோதனையில் கலந்து கொள்ள வேண்டும்

இந்நிலையில் லைசென்ஸ் பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிகள்:

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதுவே, நான்கு சக்கர வாகனப் பயிற்சிக்கு 2 ஏக்கர் இருக்க வேண்டும். 

மேலும், பயிற்சி மையங்களில் தேவையான சோதனை வசதிக்கான கொண்டிருக்க வேண்டும்.

பயிற்சியாளர்கள் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் 5 வருட ஓட்டுநர் அனுபவம் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மற்றும் IT அமைப்புகளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான (LMV) பயிற்சியை 29 மணிநேரம் முதல் 4 வாரங்களில் முடிக்க வேண்டும். 

தியரி பயிற்சி 8 மணி நேரமும், நடைமுறை பயிற்சி 21 மணிநேரம் தேவை என பிரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனரக மோட்டார் வாகனங்களுக்கான (HMV) பயிற்சியை38 மணிநேரம் முதல் 6 வாரங்களில் முடிக்க வேண்டும். தியரி பயிற்சி 8 மணிநேரம் மற்றும் 31 மணிநேரம் நடைமுறை பயிற்சி தேவை என பிரிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback