தமிழகத்தில் வெப்ப அலை இன்று 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! முழு விபரம்
தமிழகத்தில் வெப்ப அலை 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும்வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
அதன்படி ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ,தர்மபுரி ,கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல், ஈரோடு, நீலகிரி ,கோவை, திருப்பூர் கரூர் ,திண்டுக்கல், திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
01.05.2024 முதல் 03.05.2024 வரை:அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 04.05.2024 & 05.05.2024 : அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும்.
01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக
இருக்கக்கூடும். 01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர
தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
01.05.2024 முதல் 05.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
01.05.2024 முதல் 03.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
Tags: தமிழக செய்திகள்
