Breaking News

மயோனைஸுடன் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் மரணம்.187 பேர் மருத்துவமனையில் அனுமதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

மயோனைஸுடன் சிக்கன் சாப்பிட்ட பெண் மரணம்.187 பேர் மருத்துவமனையில் அனுமதி முழு விவரம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் திடீரென மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 187 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

கேரள மாநிலம் திருச்சூர் அருகே பெரிஞ்சனம் பகுதியில் ‘ஜயின் ஹோட்டல்’ என்ற பிரபல உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் ஏமன் நாட்டில் பிரபலமாக உள்ள குழிமந்தி எனும் சிக்கன் பிரியாணி பிரபலமாகும்

கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல் ஏராளமானோர் இந்த உணவகத்தில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு வீட்டுக்கு சென்ற அடுத்த சில மணி நேரத்தில் பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில் குழிமந்தி சிக்கனுடன் மயோனைஸ் வைத்து சாப்பிட்ட நுசைபா (56) எனும் பெண்மணி திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்துள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கெட்டுப்போன முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback