Breaking News

இந்தியாவை சேர்ந்த 16 வயது இளம் பெண் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவை சேர்ந்த 16 வயது இளம் பெண் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை முழு விவரம்

இந்தியாவில் இருந்து இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்ணாக காம்யா சாதித்துள்ளார். 



எஸ்.கார்த்திகேயன் இந்திய கடற்படையில் தளபதியாக உள்ளார். சிறு வயதிலிருந்தே கார்த்திகேயனின் மகள் காம்யாவுக்கு மலையேற்றத்தின் மீதான ஆர்வம் அதன் விடாமுயற்ச்சியாக 16 வயதில் 8,849 மீட்டர்கள் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்

நேபாளத்தில் இருந்து தந்தை கார்த்திகேயனுடன் மலை ஏறிய கம்யா, எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியாவின் முதல் இளம்பெண் என்ற பெருமையையும், உலகின் இரண்டாவது இளம் பெண் என்ற பெருமையையும் காம்யா கார்த்திகேயன் பெற்றுள்ளார். 

இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 

மும்பையில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் கம்யா கார்த்திகேயன், தனது தந்தை, இந்திய கடற்படை தளபதி எஸ். கார்த்திகேயனுடன், மே 20 அன்று எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தார்" என்றும்

நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இளம் இந்தியராகவும், உலகின் இரண்டாவது இளம் பெண்மணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்’ என்றும் இந்திய கடற்படை X தளத்தில் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக்இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/indiannavy/status/1793529331685396758

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback