உத்தரகாண்ட் வயல் வெளியில் பிடிபட்ட 150 கிலோ எடை ,13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வைரல் வீடியோ
உத்தரகாண்ட் வயல் வெளியில் பிடிபட்ட 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வைரல் வீடியோ
உத்தரகாண்ட் மாநிலத்தில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் 13 அடி நீள ராட்சத பாம்பு மீட்கப்பட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பான இடத்திற்கு விடப்பட்டது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் லக்சர் தாலுகாவின் இஸ்மாயில்பூர் கிராமத்தில் ராட்சத மலைப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
13 அடி நீளம் உள்ள அந்த பிரமாண்ட மலைப்பாம்பை பார்த்த விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்
தகவல் கிடைத்ததும் லக்சர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் முயற்சிக்கு பின் முட்புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டுள்ளது
இந்த மலைப்பாம்பு சுமார் 13 அடி நீளமும், அதன் எடை சுமார் 150 கிலோ எடை இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்
மீட்கப்பட்ட மலைபாம்பு வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/itspunenow/status/1787848218329420095
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
