Breaking News

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 15 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

இன்றும் நாளையும் சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு முழு விவரம்


சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் என 2 நாட்கள் இரவு நேரத்தில் இயக்கப்படும் 15 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.30, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், 

தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.40, 11.15, 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. 

செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 3.55, 4.35 மணி மற்றும் 20-ந்தேதி காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை- எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback