Breaking News

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

மே 9ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிப்பு



மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:-

09.05.2024 முதல் மார்ச் 2024 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://dge.tn.govin என்ற இணையதளத்தில் Notification பகுதியில் சென்று HSE II Year March-2024-Provisional Certificate ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ,

https://dge.tn.gov.in/ HSE II Year March-2024 Provisional Certificate Notification தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-I

விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 07.05.2024 செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல் 11.05.2024 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாள் நகல்/ மறுகூட்டல்க்கு விண்ணப்பிக்கும் நாட்கள்
07.05.2024 முதல் 1105.2024 வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்

விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்:

ஒவ்வொரு பாடத்திற்கும் .275/-

மறுகூட்டல்-I (Re-totalling-I) கட்டணம்

உயிரியல் பாடத்திற்கு மட்டும் .305-

ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) -205/-

பணம் செலுத்தும் முறை:

தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை:

விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும். http/dgetn.gov என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://tnegadge.s3.amazonaws.com/notification/Press/1714999990.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback