Breaking News

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 அட்டவணை இனைப்பு

அட்மின் மீடியா
0

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நல்வாய்ப்பு... உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சி!! உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு' நிகழ்ச்சி


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் "12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024" நிகழ்ச்சி மாவட்ட அளவிலான தொடக்க விழா, இடம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்.

பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு" என்ற நிகழ்வானது 25.06.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கப்பட்டது. 

கடந்த 2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உயர்கல்வி வழிகாட்டுதலின் மூலமாக 2,43,710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதன் தொடர் நிகழ்வாக மாண்புமிகு விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூரில் 2024 ஆண்டுக்கான "கல்லூரிக் கனவு 2024" நிகழ்வானது 29.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு 2024" நிகழ்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அட்டவனைப்படி நடைபெறவுள்ளது.

மே 8: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகபட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம்

மே 9: திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரி

மே 10: செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி

மே 11: காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர்

மே 12: ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியானது இன்று நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர் . 

இத்திட்டத்தின் நோக்கம் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயபடிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும். மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்கள். புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback