Breaking News

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு ஜூன் 11ம் தேதி தண்டணை விவரம் என அறிவிப்பு Donald Trump

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு ஜூன் 11ம் தேதி தண்டணை விவரம் என அறிவிப்பு Donald Trump


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். 

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. 

அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 

இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல் 2018ம் ஆண்டு ஆபாச படம் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவரிடனான திருமணம் தாண்டிய உறவை மறைப்பதற்காக 13 லட்சம் அமெரிக்க டாலர்களை, டிரம்ப் சார்பில் அவரது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கும் மேன்ஹேட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி மெர்க்கன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படுகிறார்.டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 11 ஆம் திகதியன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதிபராக பொறுப்பேற்க முடியுமா என்கிற கேள்வி எழுத்து உள்ளது. 

மேலும் தேர்தலில் இந்த விவகாரம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கிரிமினல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback