Breaking News

RTE கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் rte application form 2024-25 tamil nadu

அட்மின் மீடியா
0

25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க விண்ணப்பிக்க தேதி வெளியிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டம் சட்டத்திருத்தம் 2009இன் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில், பயிலும் மாணவர்களுக்கு அரசே கல்வி செலவை ஏற்கும். இதற்கு மாணவரின் புகைப்படம், ஆதார், சாதி சான்று, பெற்றோர்களின் அடையாள ஆவணங்கள், வருமான சான்று உள்ளிட்டவை கொண்டு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2024- 2025 கல்வியாண்டில் புதியதாக எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 18ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 20 ம் தேதி முதல் மே மாதம் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும்.



இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம்.

இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.

ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.


விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும் :  

https://rte.tnschools.gov.in/home

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்



குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

குழந்தையின் புகைப்படம்.

குழந்தையின் ஆதார் அட்டை

குழந்தையின் சாதி சான்றிதழ்

தந்தையின் வருமான சான்றிதழ்.

பெற்றோர்களின் ஆதார் அட்டை.

குடும்ப அட்டை


விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.05.2024

RTE விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் பள்ளிக்கல்வித் துறையின் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில் Start Application என்பதை கிளிக் செய்யவும்.

அதன்பின்பு விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, என அனைத்தையும் பதிவு செய்யுங்கள்

அடுத்து உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள நீங்கள் சேர்க்க விரும்பும் தனியார் பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டும்.

பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.

அடுத்து உங்கள் தொலைப்பேசிக்கு ஒரு பதிவு எண் குறுந்தகவல் மூலம் அவ்வளவுதான்

RTE சட்டம், 2009 தனியார் பள்ளிகளில் 2024 - 2025 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

பெற்றோர்கள் / விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.


1. பிறப்புச் சான்றிதழ்.

2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்.

3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.

4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்.

5. இருப்பிடச்சான்று,


பெற்றோர்கள் / விண்ணப்பத்தாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அதன் விவரங்களை எமிஸ் தளம் மற்றும் பள்ளியின் முகப்பு வாயிலில் பலகையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், வட்டார கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலங்களில் பதிவேற்றம் செய்ய தேவையான ஸ்கேனர் வசதி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

நேரடியாக விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு பள்ளி ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்.

tamilnadu rte school admission

TN RTE Admission 2024

RTE Tamilnadu Admission 2024 Online Registration

RTE Tamil Nadu Admission 2024-25 Apply Online

rte tamilnadu

rte tamilnadu admission 2024-25

rte tnschools

rte tnschools gov in online application 

rte 2024 to 2025 tamil nadu

rte admission 2024-25 tamil nadu

rte application form 2024-25 tamil nadu

rte application form 2024-25 tamil nadu

rte application form 2024-25 tamil nadu

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback