மூத்த அரசியல் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் உயிரிழந்தார் முழு விவரம் RM Veerappan
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி.ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 98
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இன்று உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவை ஒட்டி அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக கட்சி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். 1977 முதல் 1986ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன், 1986ல் நெல்லை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
முன்னால் முதல்வர் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார். பல்வேறு எம்.ஜி.ஆர். படங்களைத் தயாரித்து பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன், ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தைத் தயாரித்தவர்.
Tags: அரசியல் செய்திகள்