Breaking News

கனமழையால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த வீடியோ Guwahati Airport

அட்மின் மீடியா
0

கனமழையால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த வீடியோ 

கனமழை பெய்தபோது அதானி குழுமம் கட்டுப்பாட்டில் உள்ள கவுகாத்தி விமான நிலைய நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழந்தததால் பரபரப்பு.. விமான நிலையத்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி!

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாக, விமான நிலையத்தின் வெளிப்புறக் கூரையின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.காயங்கள் மற்றும் உயிர் சேதங்கள் இல்லை என விமான நிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கனமழை காரணமாக, விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலைப்போக்குவரத்தும் சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் விமான நிலைய ஊழியர்கள் கட்டிடத்தின் உள்ளே இருந்து அதிகப்படியான தண்ணீரை அகற்றும் வீடியோக்கள் வெளியானது.இதனால், விமான நிலையத்தின் செயல்பாடுகள் சுமார் 45 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/nandtara/status/1774495884790898760

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback