Breaking News

சவுதியில் பிறை தென்படவில்லை ஈதுல் பித்ர் நாளை அறிவித்த சவூதி அரசு முழு விபரம் The crescent moon has NOT been sighted in Saudi Arabia

அட்மின் மீடியா
0

சவூதி அரேபியாவில் இன்று ஏப்ரல்  08 ம் தேதி திங்கட்கிழமை ரமலான் மாத பிறை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் இன்று திங்கள்கிழமை (8-04-2024) அன்று ஷவ்வால் பிறை தென்படவில்லை, ஆகையால் நோன்பை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் (10-04-2024) புதன்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும்




பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.  இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதம் ஆகும். 

சவூதி அரேபியாவில் பிறை நிலவு காணப்படவில்லை என்பதால் ரமலான் புதன்கிழமை  தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியாவில் இன்று திங்கள்கிழமை (8-04-2024) அன்று ஷவ்வால் பிறை தென்படவில்லை, ஆகையால் நோன்பை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் (10-04-2024) புதன்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும்

தமிழகத்தில்:-

பெருநாள் (ஷவ்வால்) பிறை

கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரர்கள் வரும் 09.04.2024 செவ்வாய்கிழமை அன்று பெருநாள் (ஷவ்வால்) பிறை பார்க்க வேண்டும். தங்கள் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பிறை பார்க்கப்பட்ட தகவல் இருந்தால் நம் சபையின் பிறைக்கான மாநில பிரதிநிதிகளான மௌலவி, K.M. செய்யது அபூதாஹிர் சிராஜி ஹழ்ரத் (9444494628) மௌலவி, M. சையது மஸ்வூது ஜமாலி ஹழ்ரத் (9444119195) ஆகியோரிடம் உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். அவர்கள் தமிழக அரசின் தலைமை காஜி அவர்களுடன் கலந்து பேசுவார்கள்.

மேலும் தலைமை காஜி அவர்களின் இறுதியான முடிவு அனைவருக்கும் தாமதமின்றி தெரிவிக்கப்படும். பிறை விஷயத்தில் குழப்பவாதிகளின் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.

ஸதகத்துல் ஃபித்ரு விபரம்

ஹனபி :

1 கிலோ 633 கிராம் கோதுமை, அல்லது அதற்கான கிரயம். இவ்வாண்டு அதன் கிரயம் ரூபாய் 90/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஷாபிஈ :

2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி. பொருளாக மட்டும் கொடுக்க வேண்டும். கிரயம் கொடுக்கக் கூடாது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback