Breaking News

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை Congress manifesto 2024 PDF

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை Congress manifesto 2024 PDF



2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை 

நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்

நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்

இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்

ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்

ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்

மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் 

அனைத்து நிறுவனங்களும் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை கட்டாயம் வழங்க வேண்டும்

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்

30 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பபடும்

கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம்

21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும்!

மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு

சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்

மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகளுக்கான டீசல் மானியம் மீண்டும் வழங்கப்படும்

அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக சுதந்திரம் வழங்கப்படும்

அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் ஆயுட்காலம் முடியும்போது அரசியலமைப்பின்படியும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளின்படியும் தேர்தல் நடத்தப்படும்

100 நாள் வேலை திட்டத்துக்கான ஒரு நாள் ஊதியம் ₹400ஆக உயர்த்தப்படும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி

உணவு, ஆடை, காதல், திருமணம் உள்ளிட்ட ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரங்களில் அரசு எந்த வகையிலும் தலையிடாது

-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும்

10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூதாயத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு

மகாலட்சுமி திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தின் மூத்த மகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் உரிமை தொகை வழங்கப்படும்

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்

தேசிய கல்வி கொள்கை மறு ஆய்வு செய்யபப்டும் எதிர்க்கும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்படும்

பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்

மாநிலங்கள் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளவை!பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை Congress manifesto 2024 PDF

டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://drive.google.com/file/d/1CzJnM0KtAyqNrRalGrwPebS0jgH5i9VM/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback