Breaking News

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் BS in Data Science and Applications LEARN AT IIT MADRAS.

அட்மின் மீடியா
0

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ,பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் பிரிவுகளில் நான்காண்டு படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நடக்கிறது. 

மே 26ம் தேதி விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளாகும். 

ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் https://study.iitm.ac.in/ds மற்றும் https://study.iitm.ac.in/es என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 

12ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 


எலக்ட்ரானிக்ஸ் துறை வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற புதிய 4 ஆண்டுகால  படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த பிஎஸ்சி இணையவழிப் பட்டப்படிப்புக்கு பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் படித்த யார் வேண்டுமானாலும் படிக்கலாம் 

இந்தப் படிப்பை முடிப்பவா்கள் ஆட்டோமோட்டிவ், நுகா்வோா் மின்னணு பொருள்கள், மருத்துவ மின்னணு சாதனங்கள், பாதுகாப்பு தொழில் என பல்வேறு துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராகவோ, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகவோ பணியை தொடங்கலாம்.

இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படைப் பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது, மூன்று நிலைகளில் எந்தக் கட்டத்திலும் மாணவர்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://study.iitm.ac.in/ds

https://study.iitm.ac.in/es/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-:-

26.05.2024

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback