Breaking News

bondi westfield ஆஸ்திரேலியாவில் சோகம் ஷாப்பிங் மாலில் மக்களை விரட்டி விரட்டி கத்தியால் குத்தி கொன்ற சைக்கோ.. திடுக்கிடும் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆஸ்திரேலியாவில் சோகம் ஷாப்பிங் மாலில் மக்களை விரட்டி விரட்டி கத்தியால் குத்தி கொன்ற சைக்கோ.. திடுக்கிடும் வீடியோ வைரல்bondi westfield


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி ஜங்ஷன் புறநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வழக்கம்போல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர் அப்போது வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். திடீர் கத்தியால் குத்தியதில் சுமார் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் கொலையாளிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற கொலையாளிகளை வணிக வளாகத்தின்  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பலர் வெளியே வர முடியாமல் மால் கடைகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/stillgray/status/1779121588845318342

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/OliLondonTV/status/1779119696970678325

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback