Breaking News

மதுரை சித்திரைத்திருவிழா காரணமாக தேர்வு தேதி மாற்றம் மதுரை முதன்மைக் கல்வி அலுவர் உத்தரவு

அட்மின் மீடியா
0

மதுரை சித்திரைத்திருவிழா காரணமாக தேர்வு தேதி மாற்றம் மதுரை முதன்மைக் கல்வி அலுவர் உத்தரவு


மதுரை சித்திரைத்திருவிழாவை ஒட்டி 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கு 23ம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- மதுரை முதன்மைக் கல்வி அலுவர் உத்தரவு

                      

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

பார்வையில் காணும் சென்னை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகளின்படி, 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1) யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024 ஆம் தேதிக்கும் 12042024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 ஆம் தேதிக்கும் நடைபெறும் என இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. தற்போது மதுரை மாவட்டத்தில் 23.04.2024 அன்று சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இயக்குநரின் அனுமதி பெற்று 23.04.2024 நடைபெறும் சமூக அறிவியல் தேர்வானது 24.04.2024 அன்று நடைபெறும் என அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback